முகப்பு » சமயம் » ஓலைச்சுவடிகளில் தொடக்ககால தமிழ்க்கிறிஸ்தவ இறைநெறிப்பாடல்கள்

ஓலைச்சுவடிகளில் தொடக்ககால தமிழ்க்கிறிஸ்தவ இறைநெறிப்பாடல்கள்

விலைரூ.200

ஆசிரியர் : டேனியல் ஜெயராஜ்

வெளியீடு: ஆசியியல் நிறுவனம்

பகுதி: சமயம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
 அச்சுப்பொறியை, முதன் முதலில் தமிழகத்திற்கு தந்த சீகன் பால்கு ஜெர்மன் நாட்டில் இருந்து வந்தவர். இவரும் குருண்ட்லர் என்பவரும் வந்து, தரங்கம்பாடியில் தங்கி கிறிஸ்தவ மதத்தை பரப்பும் போது, இறைவழிபாட்டிற்கு பாடல்களை எழுத வேண்டியதாயிற்று.  அச்சுவடிகளை படித்தறிந்து,  ஆசிரியர் மிகவும் பிரயாசையுடன் நூலாக உருவாக்கியிருக்கிறார். சீகன்பால்கு வந்த காலத்தில், இவர்கள் தமிழ்கற்கஉதவிய நபர் கணபதி என்பவர். சைவ குடும்பத்தை சேர்ந்தவர். அந்தக் காலத்தில் அவர் லுத்தரன் திருச்சபை  நெறிக்கு மாறியதும், பின்பு அவர் மனசஞ்சலப்பட்டு, தன் சொந்த சைவநெறிக்கு மாறியதால், அவரைப் பற்றிய செய்திகள் அதிகம் பின்னாளில் காணாமல்  போனது என்பதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழகமக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினால், மதம் மாறியவர்களை’குலம்பூண்டவர்கள்’ என அழைத்த வழக்கமும்,  அன்றைய வாழ்வில் குடும்பத்தில் பெண்கள் எப்படி இருந்தனர் என்ற தகவல்களும், நூலின் முன்பகுதியில் தரப்பட்டிருக்கிறது.

‘தொடக்கமில்லாதவர்’, ‘அனாதி சொரூபம் கொண்டவர் ’ என்ற வார்த்தைகள்  கடவுளைக்குறிக்கும் வாசகங்களில், சில என்பது சுவடிப்பாடல் தரும் தகவல் கிறித்துவ மத தொண்டாற்றும் நூலாக இது மலர்ந்திருக்கிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us