முகப்பு » கட்டுரைகள் » எழுச்சி பெறு யுவனே!

எழுச்சி பெறு யுவனே!

விலைரூ.125

ஆசிரியர் : சுவாமி விமூர்த்தானந்தர்

வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தமிழ் இதழான, ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியாகி, வாசகர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற, 58 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இளைஞர் சக்திக்கு வலுவூட்ட, நம்மிடையே சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கும் வெற்றியாளர்களின் அனுபவங்களே, இந்த நூல்.
முதல் கட்டுரையிலேயே, டாக்டர் அப்துல் கலாம் இந்த நாட்டின், 54 கோடி இளைஞர்கள் எழுச்சி பெற, மணியான யோசனைகளை தருகிறார். அனைத்து கட்டுரைகளுமே சாதிக்க துடிக்கும் இளைஞர்களை, தட்டி கொடுத்து வழிநடத்தும் யோசனைகளை சொல்கின்றன.
ஓடும் ரயிலில் நகையை பறிக்க வந்த, முரட்டு கும்பலை எதிர்த்து போராடிய, அருணிமா சின்ஹாவை, அந்த கும்பல் ரயிலை விட்டு வெளியே தூக்கி எறிந்தது. தொடைக்கு கீழே ஒரு காலை இழந்த  அருணிமா, ஒரு வாலிபால் வீராங்கனை. இனி அவரால் ஓடிஆடி விளையாட முடியாது. எனினும், செயற்கை கால் ஒன்றை பொருத்தி, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்திருக்கிறார். மிக பயனுள்ள நூல்.
மயிலை சிவா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us