முகப்பு » வரலாறு » உலகத்தின் தோற்றமும் வரலாறும்

உலகத்தின் தோற்றமும் வரலாறும்

விலைரூ.170

ஆசிரியர் : கே.விஸ்வநாதன்

வெளியீடு: சேது அலமி பிரசுரம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
புவியின், 460 கோடி ஆண்டுகள் வரலாற்றை, 17 தலைப்புகளின் கீழ் சுருக்கி தந்துள்ளார் ஆசிரியர். உலக தோற்றத்திற்கான அணுக்கள் பற்றி சிறிய விளக்கத்தோடு, புவியின் வரலாற்றை துவங்குகிறார்.
‘இயங்குகின்ற ஒன்று, வளர்ச்சியை பெறும் ஒன்று, மாற்றத்தை அடையும் என்பதற்கிணங்க, அணுக்கள், பிரம்மாண்ட விண்பாறைகளாக உருவம் பெற்றன’ என, எளிய உரைநடையில், அறிவியலை தருகிறார் ஆசிரியர்.
ஒவ்வொரு கட்டுரையிலும், தேவைப்படும் இடங்களில் எல்லாம், அதற்குரிய படங்களை தந்துள்ளது பாராட்டத்தக்கது.
குரங்குகளில் இருந்து மனிதன் பரிமாற்றம் அடைந்ததை, ‘வாலில்லா குரங்குகளில் ஏதோ ஒரு இனப்பிரிவில், பக்குவம் அடைந்த ஆண், பெண்ணுக்கு, திடீரென ஏற்பட்ட மரபணுக்கள் மாற்றத்தாலும், பரிணாம வளர்ச்சியாலும், புது வகையான குட்டிகள் பிறந்தன. பால் தயிராக மாறுவது போல’ என, ஆசிரியர் விளக்கம் தருகிறார். கோடிக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிய புவியின் வரலாற்றை, மின்னல் வேகத்தில் சுற்றிவர செய்யும் நூல் இது!
சி.கலாதம்பி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us