முகப்பு » கவிதைகள் » ஒரு கடல் ஒரு கைவிளக்கு

ஒரு கடல் ஒரு கைவிளக்கு

விலைரூ.125

ஆசிரியர் : கவிஞர் பிரபாகர பாபு

வெளியீடு: தமிழ்க்கவி பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மனித மாண்புகளை மேம்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு. இந்தக் கைவிளக்கின் துணையுடன் சமுதாயத்தின் மூலை முடுக்குகளை எல்லாம் பார்க்க முடிகிறது. கவிஞர் பிரபாகர பாபு தன் கவியாளுமையை இந்தத் தொகுப்பில் ஆழமாக வழங்கியுள்ளார். தீயின் நாக்குகளைப் போல் தீண்டாமல் குளிருக்கு இதமாக வருடும் தீயின் வெப்பக் கவிதைகள் இவை. வெளிச்சத்திற்கும், இருட்டிற்கும் இடைப்பட்ட கணத்தை வெளிச்சமாக்கும் வித்தை, இந்தக் கவிதை தொகுப்பு முழுவதும் காணப்படுகிறது.
சுகத்தை விடவும் சோகமான சுமைகளே வாழ்க்கையை நகர்த்துகின்றன எனும் உண்மை, கசப்புக்கு அப்பால் தோன்றும் இனிப்பாகச் சுவைக்கிறது.
‘உலைக் கொதிப்பில் முகம் இருந்தாலும் உள்ளத்து விழிகளைத் தூளியில் வைக்கும் சாதுர்யம் தாய்மைக்கு மட்டுமே தெரிந்த வித்தகம்’ (பக்.70)
-முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us