முகப்பு » அரசியல் » வள்ளலின் வாக்கு

வள்ளலின் வாக்கு

விலைரூ.160

ஆசிரியர் : எம்.எஸ்.ஆர்.மணி

வெளியீடு: விஜய் பதிப்பகம்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மறைந்த எம்.ஜி.ஆர்., நடிகராகவும், தமிழக முதல்வராகவும் எப்படி எல்லாம் செயல்பட்டார் என்பதை அவரது வாழ்வு செயல்பாட்டுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள நுால். அவர் நடித்த சினிமா காட்சிகளை கண்முன் நிறுத்தி, ஆட்சிக்கு வந்த பின் அவற்றை எல்லாம் எப்படி நிறைவேற்றினார் என்பதை விளக்குகிறது.

நல்லவன் வாழ்வான் என்ற படம் பற்றி முதலில் எழுதப்பட்டுள்ளது. அதில் வரும் காட்சியை விளக்கியுள்ளார். அந்த காட்சி, அவர் ஆட்சிக்கு வந்த பின் எப்படி உண்மையாக்கப்பட்டது என பொருத்தி காட்டியுள்ளார். கனவாக இருந்ததை நனவாக்கிய விதம் விளக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்., செயல்பாட்டை புதிய கோணத்தில் அணுகி, மக்கள் நலனில் அவருக்கு இருந்த ஈடுபாட்டை நிரூபிக்கும் நிகழ்வுகளை எடுத்துரைக்கும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us