முகப்பு » ஆன்மிகம் » விராலிமலை முருகா! மயிலேறும் அழகா!

விராலிமலை முருகா! மயிலேறும் அழகா!

விலைரூ.70

ஆசிரியர் : தா.சந்திரசேகரன்

வெளியீடு: ராஜசெல்வி பப்ளிகேஷன்ஸ்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
ராஜசெல்வி பப்ளிகேஷன்ஸ் 21, லோகநாதன் நகர் இரண்டாவது தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 200)

தமிழகத் தேர்தல் அதிகாரியாக உள்ள சந்திரசேகரன் எழுதிய, அழகிய முருகன் தமிழ்நூல் இது!
விராலிமலை முருகனைப் பற்றிய வரலாறு, அவருடைய திருப்பணிகளைச் செய்து முடித்தவர்கள் பற்றிய விவரங்கள், கோவில் பற்றிய பழைய, புதிய செய்திகள், போன்ற சகல விவரங்களுடன் எழுதப்பட்ட நூல். மயில்கள் அதிகமாக உள்ள இடம் இந்த விராலிமலை என்றும், முருகன் சார்பில் மயில்களே பக்தர்

களுக்கு காட்சி தரும், நீதிமன்றத்தில் போய் சாட்சி சொல்லும் அனுபவத்தை பரவசமாய் எழுதியுள்ளார். பக்தருக்காக சுருட்டு பற்றவைத்து பாதை காட்டியதின் நினைவாக, இன்றும் அர்த்த ஜாம பூஜையில் ஆறுமுகனுக்கு சுருட்டுப் படையல் செய்யப்படுவதைக் குறிப்பிட்டுள்ளார்.

ஷ்ரீசதாசிவ பிரம்மேந்திரர், அருணகிரிநாத சுவாமிகள் மற்றும் பல சித்தர்களையும், அவர்கள் முருகன் அருள் பெற்றதையும், முன்னே விரிவாகத் தந்து, பின்னே அவர் பாமாலை தொடுத்து முருகனுக்கு, தமிழ் மணம் கமழ சூட்டியுள்ளார். `யாரடி அந்த அழகன் யாரடி என்றே கேளடி! குமரிப்பெண்ணே பாரடி அந்தக் குமரன் அழகைப் பாரடி! நேரடியாகத் தாழையே' என்று சந்தத் தமிழில் முருகனைக் கொஞ்சிப் பாடிய பல பாடல்கள் இவரது `வாக்குகள்' தெய்வீக வாக்குகள் என்று பாராட்ட வைக்கிறது. சில `கள்ள வாக்குகள்' போல, பழைய சினிமா பாடல்கள் மெட்டில், பாடித் தள்ளியுள்ளார் புதிதாக உதாரணம் சில: `பனி இல்லாத மார்கழியா! படை இல்லாத மன்னவரா? கனி இல்லாத கல்யாணமா, காதலில்லாத காவியமா?'(பாடல் 17).

`கனவு கண்டேன் நல்ல கனவு கண்டேன், கனவு அதில் கந்தன் தோன்றக் கண்டேன்'(பாடல் 9)

திருவிளையாடலின் முத்திரை வசனத்தை முருகனுக்காக இவர் மாற்றி எழுதியுள்ளார்.

`பிரிக்க முடியாதது. முருகனும் அழகும், பிரியக்கூடாதது. கல்வியும் பண்பும், சேர்ந்தே இருப்பது - முருகனும் கருணையும்' (பாடல் 35)

`அகில் அல்லவோ முருகா உனக்கு உடலைத் தந்தது' (பாடல் 38).

நூலின் கடைசியில் திருப்புகழ்ப் பாடல்களில் முக்கியமானதை அப்படியே வெளியிட்டு உள்ளார். 1994ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு ஏற்றது முதல், அவரது மனம் விராலிமலை முருகனைப் போற்றத் தொடங்கியது. அதே ஆண்டில் குடமுழுக்கு செய்து முடித்தார். அவர் உழைத்து சம்பாதித்த பணத்தில் `தேரை' செப்பம் செய்து 1999ல் வெள்ளோட்டம் விட்டு திருவிழா எடுத்துள்ளார். தேர்ப்பணி செய்த பக்தியை மெச்சித்தான் தேர்தல் பணி அதிகாரியாக அவரை விராலிமலை முருகன் உயர்த்தியுள்ளார் என்று இந்நூலைப் படிக்கும் போது உணர்வு ஏற்படும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us