/   உளவியல் / ஒரு வழிப்போக்கனின் பார்வை                      
ஒரு வழிப்போக்கனின் பார்வை
சமூகத்தில் பிரச்னைகளுக்கு தீர்வை அலசும் நுால். கோபத்தில் முடிவு எடுப்பதை, வீரம் என வீராப்பாக கொள்வது தவறு என உரைக்கிறது. தற்கொலை எண்ணம் மேலோங்காமல் தடுக்க ஆலோசனைகள் தரப்பட்டு உள்ளன. ஆரோக்கியம் மேம்பட சிரிப்பு தேவை என வலியுறுத்துகிறது. போதை பழக்கத்தில் இருந்து மீட்சி பெற வழி காட்டுகிறது. சிக்கலின் போது யாரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. குடும்ப பிரச்னைகள் ஏற்படுவதற்கான காரணத்தை விளக்குகிறது. பொறாமை அதல பாதாளத்தில் தள்ளிவிடும் என்கிறது. கிரெடிட் கார்டு. நுகர்வு ஆசையை துாண்டி, கடனாளியாக்கி விடும் என எச்சரிக்கிறது. உழைப்புடன் கூடிய மேன்மையான வாழ்க்கை முறையை வலியுறுத்தும் நுால். – டி.எஸ்.ராயன்







 
 
      