Advertisement

கடவுளைத் துறந்த ஞானி


கடவுளைத் துறந்த ஞானி

₹ 250

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தத்துவம், ஞானக் கோட்பாடுகளை அலசி கருத்துகளை தெளிவுபடுத்தும் நுால். உளவியல் ரீதியான மயக்கத்தை விலக்கி புதிய தரிசனம் தருகிறது. ஞானத்தை வளர்த்தெடுத்தல் துவங்கி, கடவுளைத் துறந்த ஞானி வரை, 22 கட்டுரைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. கடவுள், கடவுள் தன்மை, வாழ்க்கை தத்துவம், ஞானம், கல்வி, உறவு, ஆன்மா, ஆத்திகம், நாத்திகம், காலம், அன்பு, மரணம் பற்றி அலசுகிறது. மனிதர்களின் ஆற்றலை உளவியல் கோட்பாடு வழி ஆராய்கிறது. ஒரு கருத்து பற்றி முடிவு செய்யும் முன், அது பற்றிய எல்லா கோணங்களிலும் ஆராய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது. சொற்கள் தரும் பொருளை விட, அனுபவத்தின் வழி அறிவதே உன்னதமான வழிமுறை என்கிறது. வாழ்வுக்கு உகந்த தத்துவ நடைமுறையை அறிமுகம் செய்யும் நுால். – மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்