/ வாழ்க்கை வரலாறு / ஆச்சார்ய வினோபாவும் விடுதலையும்
ஆச்சார்ய வினோபாவும் விடுதலையும்
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த வினோபா, ஒழுக்கம் நிறைந்த சீலர். சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆழ்ந்த அறிவும், இறையுணர்வும் கொண்ட இவர் கீதைக்கு எளிய உரையை தாய்மொழியில் எழுதியவர். மஹாத்மா காந்தியின் முக்கிய சீடர்களில் இவர் தனித்துவம் பெற்றவர். உபநிடதங்கள் இந்திய பண்பாட்டின் கருவூலங்கள் என்றவர். அதனால், அவர் கிராம சுயராஜ்ஜியம் என்ற கருத்தை வலியுறுத்தி, ஏழை, பாமர மக்களை பொருளாதாரம், அறிவு ஆகியவற்றில் உயர்த்த, ‘பூதான் இயக்கம்’ நடத்தியவர், அதற்காக நாடு முழுவதும் பாதயாத்திரை சென்ற முனிவர். ஆனால், காந்தியடிகள் தத்துவத்தை, இந்திய பண்பாட்டினுடன் இயைந்த வாழ்க்கை கொண்ட இவரை இந்தியா கண்டு கொள்ளாதது துரதிர்ஷ்டம்.இப்போது வினோபா பற்றியும், அவர் கூறிய விடுதலையையும் அடங்கிய இந்த நுால், இந்த நாட்டின் அறிவு சார் சொத்துரிமையை தெளிவாக்குகிறது.