/ கதைகள் / அடைக்கலப் பறவை

₹ 160

மனித நேயம், கருணை போன்ற குணங்களை வலியுறுத்தும் 21 சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஆசிரியரின் கனவை, மாணவர்கள் பெரிய நிலைக்கு சென்று அவரின் ஓய்வுக்கு பின் நிறைவேற்றி கொடுப்பதை, ‘கனவு மெய்ப்பட’ கதை சமூக அக்கறையுடன் சொல்கிறது. தேர்வில் தோல்வி அடைந்தவனை பெற்றோர் வசைபாட, தன்னம்பிக்கை ஊட்ட பாட்டி எடுத்த செயலை, ‘தோல்வியில் கலங்கேல்’ கதை பகிர்கிறது. எலியால் பாக்கெட் மணி கரைந்ததை நகைச்சுவையுடன் சொல்கிறது, ‘எலி வேட்டை’ கதை. தொற்று நோய் பரவலில் கூட மனிதநேயமின்றி செயல்பட்ட வியாபாரியை, ‘நாவின் நடனம்’ கதை சுட்டிக் காட்டுகிறது. போராடும் உணர்வுகள், அனுபவ சொற்கள், பொறுமையே பெருமை, அவன் தான் மனிதன் என மனிதனின் இயல்பான குணங்களை பிரதிபலிக்கும் கதை நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை