/ வர்த்தகம் / அடிப்படை மார்க்கெட்டிங் கோட்பாடுகள்
அடிப்படை மார்க்கெட்டிங் கோட்பாடுகள்
உலக சந்தையில் நடந்த நிகழ்வுகள் வழியாக மார்க்கெட்டிங் விதிகளை விளக்கும் தொகுப்பு நுால். வணிகவியல் படிப்போர், தொழில் முனைவோருக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.வணிகவியல் விதி நடைமுறை உதாரணங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டிங் கொள்கைகளின் அடிப்படை நோக்கம், அவற்றில் உள்ள மாற்ற முடியாத உண்மைகளை அறியத் தருகிறது. வியாபாரத் துறையில் பிரகாசிக்க விரும்புவோருக்கு தெளிவு தரும் வகையில் உள்ளது.முன்னுரை, பின்னுரை மற்றும் தரமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டிங் கோட்பாடுகள் பற்றி தமிழில் வந்துள்ள மிகச்சிறந்த வழிகாட்டி நுாலாக உள்ளது. – இளங்கோவன்