/ இலக்கியம் / அகநானூறு- களிற்றுயானை நிரை
அகநானூறு- களிற்றுயானை நிரை
எட்டுத்தொகை நுால்களில் ஒன்று. அகப்பொருள் பற்றிய 400 பாடல்களை கொண்டது. இந்த பாடல்கள் 145 புலவர்களால் இயற்றப்பட்டவை. இந்த நுால் களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என்ற பிரிவுகளை உடையது. நடைநயம் கருதி இம்மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. தொகுப்பில் ஒற்றை எண் பாடல்கள் பாலைத்திணையைச் சார்ந்தவை. பத்தாவது பாட்டு நெய்தல் திணை. அகநானுாற்றில் அமைந்துள்ள இவ்வமைப்பு முறை சிறப்பாக குறிப்பிடத்தக்கது. அகநானுாற்றில் வரலாற்று குறிப்புகள் உடைய பாடல்களால் அக்காலத்திய தமிழக பண்பாடு, வரலாறு பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. வள்ளல்கள் பற்றிய வரலாற்றையும் அறிய தரும் நுால். – சிவா




