/ இசை, இயல், நாடகம் / அன்பே... நீ வாராய்...

₹ 140

காதலின் மெல்லிய உணர்வுகளும், குடும்ப உறவுகளும், சமூக அவலங்களும் அடங்கிய நாடக நுால். மாமன், மைத்துனர் இடையே கொடுக்கல், வாங்கலில் மனத் தாங்கலால் பிரிந்த குடும்பங்களை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. குடும்பத் தலைவி இறை நம்பிக்கையுடைய பக்தை. குடும்பத் தலைவர் நாத்திக கருத்துடையவர். துப்பறிவதிலும் வல்லவரான மகன் எதிர்பாராத விதமாக தாய்மாமன் மகளை காதலிக்கிறார். திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்காது என, ரகசிய கல்யாணம் செய்து கொள்கிறார். இதை அறியாத குடும்பம் மற்றொரு பெண்ணை மணமுடிக்க ஏற்பாடு செய்கிறது. இத்தகைய சூழலுடன் எளிய உரையாடல் மற்றும் நகைச்சுவையுடன் அமைந்த கதை நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை