/ புத்தக மதிப்புரை / ஆண்டாளின் அந்தரங்கன்

₹ 150

பக்திக்கு ஆதாரம் புலன்களிடமிருந்து விடுதலை பெறுவதே என்பதை எடுத்துரைக்கும் நுால். புலன்கள் ஒடுங்க நோன்பு ஒரு வழியென்று ஆண்டாள் வழியாக இனம் காட்டுகிறது. நோன்பு உடலையும், உள்ளத்தையும் துாய்மையாக்கி செம்மைப்படுத்தும் ஒரு தியாக உணர்வு என்கிறது. நோன்பின் வழியாக பக்தி பயிர் விளைவிக்க, பெண் குலத்தை அடியார்களாக பூலோகத்திற்கு அனுப்பியதை எடுத்துக் கூறுகிறது. கம்பன் காட்டும் கோசலை நாடும், திருப்பாவை காட்டும் ஆயர்பாடியும் ஒப்பீடு செய்யப்பட்டு உள்ளன. ராமனை நினைத்து நெஞ்சுருகும் சீதையும், கண்ணனை நினைத்து கசிந்துருகும் ஆண்டாளும் நெஞ்சை நெகிழ்விக்கின்றனர். கண்ணனை காதலனாக்கி கசிந்துருகிய ஆண்டாள், அரங்கனுடன் இணைவதை விவரிக்கும் நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை