/ கதைகள் / விலங்குப் பண்ணை
விலங்குப் பண்ணை
விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். காட்டில் ஒரு பன்றி தலைமை ஏற்று, ஆட்சி நடத்துவது போல் நகைச்சுவையுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. விலங்குகளுக்கு பண்ணை அமைத்து, சுதந்திரமாக வாழ்வதற்கான வழிமுறையை உருவாக்குகிறது. பன்றி தன் அதிகாரத்தை தக்க வைக்க போடும் ஆட்டங்கள் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளன. விலங்குகளே கதாபாத்திரங்களாக இருப்பதால், சிறுவர் – சிறுமியர் படிக்க ஏற்ற வகையில் உள்ளது. மற்ற விலங்குகளுக்கு பன்றி விதிக்கும் கட்டுப்பாடுகள், தலைமை பொறுப்பை தக்க வைக்க எடுக்கும் நடவடிக்கைகள் என சுவாரசியம் குன்றாமல் உள்ளது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள சுவாரசியம் நிறைந்த நாவல். – ராம்




