/ கவிதைகள் / அண்ணாவின் செவ்வாழை

₹ 120

மரபுக் கவிதை வடிவில் அமைக்கப்பட்டுள்ள கதைகளின் தொகுப்பு நுால். முதல் கதை, அண்ணாதுரை படைத்த செவ்வாழை. இதில், உழைப்பின் பயன் சென்று சேராத துன்பநிலை விருத்தப்பாவில் வடித்து தரப்பட்டுள்ளது. ஏழு கதைகளில் இரண்டு நாடகப் பாடல், ஐந்து கதைப் பாடல் என காவிய நடையில் தருகிறது. சந்தம் கவிதைகளை சொந்தமாய் தத்தெடுத்துள்ளன. எண்ணம் யாவும் எழுத்தில் வடியும் வண்ணம், சிந்தனைக் கலவையுடன் தருகிறது. விருத்தப்பாவிலும், ஆசிரியப்பாவிலும் அழகிய நடையில் கதைகள் சொல்லப்பட்டுள்ளன. பெரும்பாலும் வரலாற்றை மையமாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. கவிதை உள்ளம் கொண்டோருக்கு நல்ல விருந்து படைத்துள்ளது. தெளிந்த தமிழில் மரபுக் கவிதையை தரும் நுால். – முகிலை ராசபாண்டியன்


முக்கிய வீடியோ