/ புத்தக மதிப்புரை / ஆறுபடையோனும் ஆட்கொண்ட சித்தர்களும்

₹ 200

முருகப்பெருமான் ஆட்கொண்ட சித்தர்கள் பற்றி விளக்கமாக தரும் நுால். பெண் சித்தர்களும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முருகப்பெருமானால், பக்தர்கள் எப்படி ஆட்கொள்ளப்பட்டனர் என்பதை எடுத்துரைக்கிறது. அவர்கள் செய்த அரும்பெரும் செயல்கள், சித்து விளையாட்டுகள் என ஏராளமான தகவல்கள் அலங்கரிக்கின்றன. பன்னீரிலையின் விபூதி பிரசாத பெருமை விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பழமுதிர்சோலை பெயர் காரணமும், அவ்வையின் அகந்தையை முருகன் அகற்றிய விதமும் எடுத்து சொல்லப்பட்டுள்ளது. விராலிமலையில் முருகனுக்கு சுருட்டு படைக்கும் காரணம் விளக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானுக்கு சூட்டப்பட்ட புகழ்மாலை நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை