/ ஆன்மிகம் / அத்வைத மகரந்தம்
அத்வைத மகரந்தம்
அத்வைத மகரந்தம் தர்க்க ரீதியுடன் சம்பிரதாய முறையில் சொல்லி தரும் அற்புதமான வேதாந்த சாஸ்திர நுால். இதற்கு அழகிய ஆங்கில உரை தந்தவர், தயானந்த சரஸ்வதி சுவாமிகள். அதன் அடிப்படையில் தமிழில் உரை செய்யப்பட்டுள்ளது. லக்ஷ்மீதர கவி, அத்வைத மகரந்த நுாலை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். இது, சங்கரருக்கு பின் எழுந்தது. மரபு பிசகாமல் வேதாந்த விஷயத்தை முழுமையாக விளக்குகிறது. சுவாமி தயானந்த சரஸ்வதி, ‘வேதாந்த வகுப்பை, தத்வபோதத்தில் துவங்கி அத்வைத மகரந்தத்தில் முடிப்பேன்’ என்று அடிக்கடி சொல்வாராம். அத்தகைய சிறப்பு வாய்ந்த கருத்துகள் உடையது. தன் அனுபவத்தில் முரண்பாடு வார்த்தைகள் இன்றி கனகச்சிதமான வேதாந்த நுாலாக இது உள்ளது என்கிறார் ஆசிரியர்.– பானுமதி