/ ஆன்மிகம் / ஆழ்வார்களும் ஆசார்யர்களும்

₹ 100

ஆழ்வார்கள், வைணவ ஆசார்யர்கள் வரலாற்றை சுருக்கமாக தரும் நுால். ஒவ்வொரு ஆழ்வாரின் பெயர் காரணம், தோன்றிய திருத்தலம், நாள், நட்சத்திரத்தை எடுத்துக் கூறுகிறது. அவர்களின் திருப்பாடல்களில் சிலவற்றை எளிமையாக விளக்குகிறது. மூன்று பக்கங்களில் ஒவ்வொரு ஆழ்வார் வரலாறும் அமைந்துள்ளது. வைணவ ஆசார்யர்களாக போற்றப்படும் நாதமுனி, ராமானுஜர், மணவாள மாமுனிகள் உட்பட, 15 பேரின் வரலாறும் சொல்லப்பட்டுள்ளது. நிறைவாக ராமானுஜர் நுாற்றந்தாதி குறிப்பு அமைந்துள்ளது. அது கூரத்தாழ்வாரின் சீடரான திருவரங்கத்து அமுதனார் படைத்தது என விளக்கப்பட்டுள்ளது. ராமானுஜருடன் ஒன்றாக வாழ்ந்த அனுபவத்தையும் தரும் நுால். – முகிலை ராசபாண்டியன்


சமீபத்திய செய்தி