/ கதைகள் / பிரம்மன் எழுதிய எழுத்து!

₹ 80

குன்றக்குடியை மையமாக்கி படைக்கப்பட்டுள்ள நாவல். இரு மனங்களின் இணைப்பையும், காணும் இல்லறத்தையும் முதல் பகுதியில் எளிய ஆற்றோட்ட நடையில் சுவைபட விவரிக்கிறது. பின் தான் சோதனை வருகிறது. பிள்ளைகள் வளர்ந்த பிறகு தரும் தொல்லைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை என்பதை காட்டுகிறது. கணவன் எங்கே சென்றான் என தெரியாமல் பிள்ளையுடன் மகள் வருவதும், அவர்களை காப்பாற்ற வேண்டியதும் கட்டாயமாகிறது. திருமணம் செய்தவன் தரும் தொல்லைகள் எல்லாம் உலகில் நடப்பவை தான். ஆனால், அரிதாக நடக்கும் மதம் மாறிய திருமணம் என்பது கிளைமாக்ஸ். நல்ல பாத்திரப் படைப்புகள் உள்ளன. இதில் சொல்லப் பட்டிருக்கும் 10 பொருத்தங்கள் இருந்தால், திருமண வாழ்க்கை சுபிட்சமாக அமையும். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை