/ இசை, இயல், நாடகம் / மறக்க முடியுமா கலைஞரின் பராசக்தியை....

₹ 140

பராசக்தி திரைப்படம் பற்றிய அரிய தகவல்கள் உடைய நுால். பராசக்தி படத்தில் திரைத்துறைக்கு அறிமுகம் ஆனவர் நடிகர் சிவாஜி கணேசன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அவர் மிகவும் ஒல்லியாக காணப்பட்டதால், தயாரிப்பாளர்களிடம் நிலவிய குழப்பம் பற்றி விரிவான தகவல்கள் உள்ளன. சிவாஜியை நன்றாக சாப்பிட வைத்ததாக சுவையான தகவல் தரப்பட்டுள்ளது. இந்த படத்தை தடை செய்வது குறித்து அப்போதைய அரசின் கருத்தும் கூறப்பட்டுள்ளது. பூசாரியாக பாடலாசிரியர் கே.பி.காமாட்சியும், நீதிபதியாக கவிஞர் கண்ணதாசனும் நடித்திருந்ததை அறிய தருகிறது. திரைப்பட கதை மற்றும் வசனத்தையும் தொகுத்து தருகிறது. பராசக்தி பற்றி திரைக்கு பின்னால் உள்ள தகவல்களை தரும் நுால். – முகிலை ராசபாண்டியன்


முக்கிய வீடியோ