/ கதைகள் / தென்னிந்தியாவில் சத்ரபதி சிவாஜி தொடர்ந்த பயணம் -தொடரும் பாரம்பரியம்

₹ 150

சத்ரபதி சிவாஜியின் வரலாற்று பயணத்தை கூறும் நுால். மராத்திய வீரர்களின் உணர்வுகளையும் அறியத்தருகிறது. தந்தை இறந்த பின், உடன்கட்டை ஏற எண்ணிய தாயை தடுத்து நிறுத்தியவர் சிவாஜி. தாய் அரவணைப்பில் வளர்ந்த விதம் சொல்லப்பட்டுள்ளது. சிறுவயதில் பெங்களூர் வாசம், சிவாஜி வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கிறது. ஸ்ரீசைலம், ஸ்ரீ மல்லிகார்ஜுனர் கோவிலில் தன்னையே காணிக்கையாக அளிக்க முன் வந்தது வியப்பு தருகிறது. செஞ்சி கோட்டையை வெற்றி கொண்டது பரவசம் ஊட்டுகிறது. அடிமை வியாபார தடை பற்றிய தகவலும் உடைய நுால். – டாக்டர் கார்முகிலோன்


முக்கிய வீடியோ