/ ஆன்மிகம் / சிதம்பரம் தில்லை நடராஜர்
சிதம்பரம் தில்லை நடராஜர்
சிதம்பரம் நடராஜர் கோவில் வரலாறு, பெருமைகளை விளக்கும் வகையிலான ஆன்மிக நுால். மருத்துவ குணம் மிகுந்த தில்லை தாவரம் அடர்ந்து வனமாக இருந்த காரணத்தால், சிதம்பரம் தில்லை வனமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தலப்பெருமையில், தில்லை சிற்றம்பலத்தின் தொன்மை குறித்து திருநாவுக்கரசர் போற்றிப் பாடியது உள்ளது.சிவலிங்க தத்துவங்கள் விளக்கப்பட்டு, பஞ்சபூத தல விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. இதில், சிதம்பரம் ஆகாய தலமாக விளங்கும் சிறப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமானின் வடிவ பட்டியலும், தாருகாவனத்தில் ஆனந்த தாண்டவம் ஆடிய செய்தியும் ரசித்து படிக்கும்படி உள்ளன. சிதம்பரம் பற்றிய தகவலுடன் ஆன்மிக அன்பர்களுக்கு பயன் தரும் நுால்.-– முகில்குமரன்