/ வாழ்க்கை வரலாறு / சோழர்கள்
சோழர்கள்
இந்தியாவின் தென்பகுதியில் ஆட்சி செய்த சோழர்கள் குறித்த விபரங்கள் அடங்கிய நுால். அரசியல், நிதி நிர்வாகம், நீதி பரிபாலனம், கலை, பண்பாடு, கட்டுமானம் என ஒவ்வொரு துறையிலும் செய்துள்ள பங்களிப்புகள் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. படைத்திறனால் பெற்றிருந்த வலிமை, போர்க்களங்களில் சாதனைகள் பற்றிய முக்கிய தகவல்களும் தரப்பட்டுள்ளன. சோழர்களின் நீண்ட ஆட்சி கால வரலாற்றை இலக்கிய தகவல்கள், கல்வெட்டு பொறிப்புகள், செப்பேடு மற்றும் ஆவணங்கள் துணை கொண்டு எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக பண்பாட்டில் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்றவை பெருமித சின்னங்களாக அமைந்துள்ள பின்னணியும் கூறப்பட்டுள்ளது. சோழர்களின் ஆட்சித்திறன் பற்றி எளிய நடையில் எடுத்துரைக்கும் நுால். – ஒளி




