/ வாழ்க்கை வரலாறு / ஒளி இயக்குநர் பாலு மகேந்திரா
ஒளி இயக்குநர் பாலு மகேந்திரா
சினிமா இயக்குநர் பாலு மகேந்திரா கடந்து வந்த பாதையை கூறும் நுால். இயக்கி, ஒளிப்பதிவு செய்த படங்கள், கதை நேரம், உடன் பணியாற்றியோரின் பேட்டி என, மூன்று பாகமாக உள்ளது. இலங்கையில் பிறந்து இந்தியாவில் விருதுகள் வாங்கியதை விவரிக்கிறது. அவர் இயக்கிய திரைக்கதைகள், விமர்சன பார்வையுடன் பகிரப்பட்டுள்ளது. ‘டிவி’ கதை நேரம் நிகழ்ச்சியில், தேர்வு செய்த 40 கதைகளை சுருக்கமாக தருகிறது. குடும்ப வாழ்க்கை குறித்து கூறிய ஒப்புதல் வாக்குமூலமும் உள்ளது. வாழ்வின் மறைவான பக்கங்களை வெளிப்படையாக பேசியதை கூறுகிறது. தமிழ் சினிமா இயக்குநர் களுக்கு படிக்கும் பழக்கம் இல்லை என்கிறது. உதவியாளர்களை புத்தகம் படிக்க வைத்த உத்தியையும் கூறும் நுால். – டி.எஸ்.ராயன்