₹ 200

துப்பறியும் கதைகள் எவ்வளவு சுவாரஸ்யமானவையோ, கணிதமும் அவ்வளவு சுவாரஸ்யமானது தான்’ என்பதை ‘Cracking crimes’ என்ற இந்த ஆங்கில நுாலைப் படித்ததும் உணரலாம். எளிமையான ஆங்கிலத்தில் மொத்தம், 12 துப்பறியும் கதைகள்; ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வகையான குற்றச் சம்பவங்கள்.துப்பறியும் நிபுணர் ருத்ரனும், அவரது உதவியாளர் சோபியாவும் வெவ்வேறு கணிதச் சிந்தனைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பதை மிகவும் எதார்த்தமாகக் கதைப்படுத்தியிருக்கிறார் நுாலாசிரியர் சிவராமன். கணிதத்தின் மீது பொதுமக்களுக்கு உள்ள பயத்தைக் களைவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும், ‘பை கணித மன்றம்’ இந்த நுாலை வெளியிட்டுள்ளது. கணிதம் மீதான பயத்தைக் களையும் முயற்சியில் இந்தப் படைப்பு வெற்றி பெற்றிருக்கிறது. இந்தக் கதைகளை வாசித்த பிறகு, அல்ஜீப்ரா, கிராப் தியரி, காம்பினடோரிக்ஸ், ப்ரபோஷிஷனல் லாஜிக் போன்ற பல்வேறு கணித சிந்தனைகள் உங்களுக்கு அறிமுகமாகியிருக்கும். ‘இதெல்லாம் கணித மேதைகளுக்கு மட்டுமே புரிகிற விஷயமாச்சே! நமக்கெப்படி புரியும்?’ என்று நினைக்கலாம். ஆனால், இந்த நுாலில் இடம்பெற்றுள்ள 12 கதைகளும், இத்தகைய கணித சிந்தனைகள் அன்றாட வாழ்வில் எங்கெங்கெல்லாம் வெளிப்படுகின்றன என்பதை மிக எளிமையாக உணர்த்துகின்றன.‘துப்பறியும் கதைகள்’ எனும் யுத்தியைப் பயன்படுத்தி, அந்தப் பணி யைச் செய்திருக்கிறார் நுாலாசிரியர்.– நர்மதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை