/ வாழ்க்கை வரலாறு / டார்வின் வாழ்வும் அறிவியலும்
டார்வின் வாழ்வும் அறிவியலும்
உலக அளவில் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அறிஞர் டார்வின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து தரும் நுால். டார்வின் பிறந்த காலக்கட்டம் பற்றிய தகவல்களை விரிவாக எடுத்துரைக்கிறது. வரலாற்றில் அப்போது இருந்த கொந்தளிப்பான அரசியல் சூழல் பற்றிய விபரங்களை தருகிறது. அந்த சூழலில் அவரது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள், ஆராய்ச்சிகள், பயணங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. உயிரினங்களின் தோற்றம், பரிணாம தத்துவம் கதை போல் விவரிக்கப்பட்டுள்ளது. இயற்கை தேர்வு, மனிதர்கள் குரங்கில் இருந்து வந்தவர்களா போன்றவற்றுக்கு தக்க பதில்களை தருகிறது. சார்லஸ் டார்வினின் வாழ்க்கை வரலாறு மட்டுமின்றி பரிணாம தத்துவத்தில் உள்ள பங்களிப்பையும் எடுத்துரைக்கும் நுால். – ஒளி




