/ சிறுவர்கள் பகுதி / டாக்டர் சாம்பல் முயல்
டாக்டர் சாம்பல் முயல்
சிறுவர் – சிறுமியர் புரிந்து கொள்ள ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 18 கதைகள் கலகலப்பு ஊட்டுகின்றன. அறிவாற்றலை சிறுவர்கள் பெறும் சிந்தனையுடன் கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. விலங்குகளை கதாபாத்திரங்களாக்கி புனையப்பட்டவையும் உள்ளன. அவை அறநெறிகளை போதிக்கின்றன. மனதில் மாற்றத்தை விதைப்பதாக உள்ளன. சர்க்கரை அரக்கன், இல்லை தாத்தா, ஹெல்மெட், குயில் ஏன் காக்கை கூட்டில் முட்டையிடுகிறது போன்ற தலைப்புகள் கற்பனையை துாண்டுவதாக உள்ளன. ஒவ்வொரு கதைக்கும் தக்க ஓவியங்கள் தரப்பட்டுள்ளன. இது, கற்பனை திறனை அதிகரிக்கும் வகையில் உள்ளது. கதைகளில் அறங்கள் மிக இயல்பாக சொல்லப்பட்டுள்ளன. சிறுவர்களின் சிந்தனையை துாண்டும் தொகுப்பு நுால். – ராம்