/ கவிதைகள் / எல்லா ராத்திரிகளும் விடிகின்றன

₹ 110

வாழ்வில் நம்பிக்கையூட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். ஒளிக்கீற்று போல், ‘பத்து முறை விழுந்தவனிடம் பூமி சொன்னது... நீ ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா...’ என சிலிர்ப்பூட்டுகிறது. முயற்சியின்றி மூலையில் முடங்குவோரை, ‘ராத்திரிகள் நிரந்தரமாக இருந்து விடுவதல்ல; அவற்றுக்கு விடியல் உண்டு’ என தன்முனைப்பூட்டுகிறது. அவமானப்படுத்துபவரை விட சிறந்த ஆசிரியர் இல்லை என்கிறது. அலட்சிய வார்த்தை வெற்றி தொலைவில் இல்லை என மலர்ச்சி ஊட்டுவதாக எழுச்சி தருகிறது. கேள்வி எழுப்பும் நாடு கிளர்ந்து முன்னேறும் என உரைக்கிறது. முன்னேற உணர்வை தரும் நுால். – புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ