/ வரலாறு / எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்.,
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்.,
"எதிரிகளை மட்டுமல்லாமல் எமனைக்கூட ஏழெட்டுத் தடவை பந்தாடி, தன் இழுத்த இழுப்பில் வைத்திருந்த வாகை மலர். எல்லாரும் வீட்டில் பூனைகளையும், புறாக்களையும் வளர்த்தபோது, நம் வள்ளல் வீட்டில் சிங்கம் வளர்த்த சீமான் என்று புகழாரம் சூட்டும் நூலாசிரியர் எம்.ஜி.ஆரின் அருங்குணங்களை அழகுறப் படம் பிடித்துள்ளார்."கோபம் கூட கொடுக்கின்ற கோபமாக இருந்திருக்குமே தவிர கெடுக்கிற கோபமாக என்றைக்குமே வள்ளலுக்கு வந்ததில்லை என்று காளிமுத்துவும், "இந்த நூல் படைப்பாளன் ஒரு தலைவனைப் பார்க்கிற பார்வையில் எழுதப்பட்டது என்பதை விட, ஒரு பக்தன் கடவுளைப் பார்க்கிற பார்வையில் எழுதப்பட்டது என்று வைரமுத்துவும் அணிந்துரையில் சிறப்பித்துள்ளனர். 12ம் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூல் எம்.ஜி.ஆர்., ரசிகர்களுக்கு நல்ல விருந்து.




