/ வாழ்க்கை வரலாறு / ஏழைகளின் இறைவன் எம்.ஜி.ஆர்
ஏழைகளின் இறைவன் எம்.ஜி.ஆர்
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆர்., பெருமை கூறும் நுால். எம்.ஜி.ஆர்., குடும்பம், பூர்வீகமாக கோவையில் இருந்து, பின்னர் கேரளம் சென்றதாக குறிப்பிடுகிறது. முதல்வரான பின், எம்.ஜி.ஆர்., ஒரு அடி நிலம் கூட வாங்கவில்லை என்கிறது. தனக்கு சொந்தமான கட்டடத்தை நினைவு இல்லமாகவும், அ.தி.மு.க., அலுவலகமாகவும் மாற்றியதை குறிப்பிடுகிறது. மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தியது; தமிழ் பல்கலைக் கழகம் அமைத்தது, தமிழ் எழுத்து சீர்திருத்த சட்டம் என செயல்களை தருகிறது. சத்துணவு, பல்பொடி, காலுக்கு செருப்பு திட்டங்களை கொண்டு வந்ததை அறியத் தருகிறது. எம்.ஜி.ஆர்., பற்றிய தகவல் நிறைந்த நுால். – முனைவர் கலியன் சம்பத்து




