/ வாழ்க்கை வரலாறு / ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்
ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்
நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் செவிலியரில் முன்னோடியான ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் வாழ்க்கை வரலாற்று நுால். பணக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க தாய் முயன்றபோது, ப்ளாரன்சின் சிந்தனை ஏழை நலன் குறித்ததாக இருந்தது. அக்காலத்தில் மருத்துவமனையை மேம்படுத்த உதவியது குறித்து கூறுகிறது. எதிர்ப்பையும் மீறி, லண்டன் மருத்துவமனையில் சீர்திருத்தம் செய்ததை குறிப்பிடுகிறது. போரில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளித்த வரலாற்றை எடுத்துரைக்கிறது. மருத்துவ துறையில் மாற்றங்களை கொண்டு வர காரணமாக விளங்கியதை குறிப்பிடுகிறது. செவிலியர் படிப்பு திட்டம் துவங்கியவரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நுால். – டி.எஸ்.ராயன்