₹ 200

உலகை அழிவின் பாதைக்கு அழைத்து சென்ற சர்வாதிகாரி ஹிட்லர் வாழ்க்கையை விவரிக்கும் நுால். இரண்டாம் உலகப்போருக்கு காரணமாக இருந்தவர் ஹிட்லர். கொடுங்கோலனாக, சர்வாதிகாரியாக விளங்கியது பற்றிய தகவல்களை விரித்துரைக்கிறது. மொத்தம் 22 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்தந்த தலைப்புக்கு பொருத்தமான படங்களும் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் உலகப்போர் பற்றி விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஹிட்லர் அமைத்திருந்த வதை முகாம்கள் குறித்த செய்திகளும் உள்ளன. அந்த காலத்தில் ஹிட்லர் பற்றி பரவியிருந்த வதந்திகள் குறித்தும் தனி தலைப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. உலகை அழிவுப்பாதையில் தள்ளி, மக்களை சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்திய விபரங்கள் உள்ளன. உலகை கலங்கடித்த கொடுங்கோலன் பற்றிய நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை