/ சுய முன்னேற்றம் / சுறுசுறுப்பாக வாழ்வது எப்படி?
சுறுசுறுப்பாக வாழ்வது எப்படி?
அ ன்றாட வாழ்வை சுறுசுறுப்பாக அமைத்துக் கொள்வதற்கு வழிகாட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். வாழ்க்கையின் வெற்றிக்கு சுறுசுறுப்பு மிக அவசியம். அதை எவ்வாறு அடைவது, எப்படி தக்க வைத்துக் கொள்வது, அதன் சூட்சுமங்கள் என்னென்ன என்பதை தெளிவாக்குகிறது. சலிப்பு, சோர்வு, போட்டி மனப்பான்மையை கடந்து வரும் வழிமுறைகள் அழகுற சொல்லப்பட்டு இருக்கின்றன. சுறுசுறுப்பில் கிடைக்கும் மனநிறைவும், மகிழ்ச்சியும் எத்தகைய எல்லைக்கு இட்டுச் செல்லும் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. சுறுசுறுப்பு போலவே ஓய்வும், உறக்கமும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சரியான ஓய்வு, உறக்கத்தை தெளிவுபடுத்துகிறது. சுறுசுறுப்புடன் ஒட்டிக் கொள்ளும் அனுபவம் தரும் நுால். – ஊஞ்சல் பிரபு




