/ கதைகள் / இடமோ வலமோ

₹ 150

நாட்டு நடப்புகளையும், அரசியல் நிலவரங்களையும் அலசி படைக்கப் பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். அரசியல்வாதிகளின் ஒவ்வொரு செயலையும் மிகவும் கிண்டல் நிறைந்த நடையில் தருகிறது. அரசியல் கட்சியினரை ஒவ்வொரு கதையும் கூர்மையாக விமர்சிப்பதாக உள்ளன. எள்ளல் நிறைந்த அபூர்வமான மொழிநடை நகைச்சுவையை துாண்டுவதுடன், சமூகத்தைப் பற்றி சிந்திக்கவும் வைக்கிறது. சில கதைகளை வாசிக்கும் போது, சிரிப்பை அடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சிலவற்றை புன்னகையுடன் கடந்து செல்ல முடிகிறது. சில கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ள விதம், மனதில் வெறுமையை தந்து புதிய சிந்தனையை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் அன்றாட நிகழ்வுகளை கூர்ந்து நோக்கி படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். – மதி


புதிய வீடியோ