/ சிறுவர்கள் பகுதி / இளவரசரின் கனவு
இளவரசரின் கனவு
பஞ்சாபி மொழியில் பாலசாகித்திய புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுவர் – சிறுமியருக்கு அறம் போதிக்கும் வகையில் அமைந்துள்ளது. தொகுப்பில் இளவரசரின் கனவு, ஆணவம், தண்டனை, வினை விதைத்தவன் வினை அறுப்பான், இயற்கை, ஒற்றுமை, சகவாசம், குறும்பு உட்பட, 20 தலைப்புகளில் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. உலகில் உள்ள உயிரினங்களின் பண்புகளையும், அவற்றுடன் மனிதனுக்கு உள்ள தொடர்பையும் எடுத்துரைக்கின்றன. அறியாமையை அகற்றி அறிவு புகட்டும் வகையில் உள்ளன. இயற்கை நீதியை போதிக்கின்றன. எளிய உரையாடல்கள் வழியாக அறிவுக்கண்ணை திறந்து வைக்கின்றன. சிறுவர் – சிறுமியருக்கு அறிவூட்டும் கதைகளின் தொகுப்பு நுால். – ஒளி




