/ கட்டுரைகள் / இந்தியக் குரங்கினங்கள்

₹ 135

இந்திய நிலப்பரப்பில் வாழும் குரங்கினங்கள் பற்றி சுவாரசியமான தகவல்கள் உடைய நுால். இலையை உண்பது ஆதி குரங்கு, இலையை உண்ணாதது மனித குரங்கு என வகைப் படுத்தி, அறிவியல் ரீதியாக தகவல்கள் திரட்டி தரப்பட்டுள்ளன. இந்திய காடுகளுக்கும், குரங்கு இனங்களுக்கும் உள்ள உறவை தெளிவுபடுத்துகிறது. கண்ணை கவரும் தங்க நிற குரங்கு, கண்ணாடி அணிந்தது போல் காட்சி தருவது, உணவு உண்டதும் பற்களை சுத்தம் செய்யும் இனம் என தகவல்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. கரடிக்கு பழம் பறித்து கொடுக்கும் குரங்கு இனம், பன்றி போல் வால், நண்டை விரும்பி உண்ணும் வகை, பருவ மழையை கணித்து குட்டி ஈனும் இனம் என சுவாரசியம் தரும் தகவல்களுடன் உள்ளது. இந்திய குரங்கினம் பற்றிய தெளிவுபடுத்தும் நுால். – ஒளி


சமீபத்திய செய்தி