/ மருத்துவம் / இந்திய மருத்துவ பொற்காலம்

₹ 440

மருத்துவத்தில் ஆயுர்வேதத்துக்கும் முன்னோடி தமிழக சித்த வைத்தியம் என்பது உட்பட பல தகவல்களை அறிய வைக்கும் நுால்.உடலில் உள்ள நாடிகள் 72,000. கருவில் உருவாகும் 10 நாடிகள் என்னென்ன என்ற விபரங்கள் உள்ளன. மிருக வைத்தியத்திலும் முன்னோடி என்பதற்கு ஆதாரத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காந்த சிகிச்சை பற்றியும் விரிவான தகவல்கள் உள்ளன.சித்த மருத்துவத்தில், மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் எண்ணிக்கை 4,448 என்கிறது. மனித உடலில் எங்கெங்கே ஏற்படக்கூடும் என்ற பட்டியல் தந்து ஆச்சரிய உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. விஷமுறிவு வைத்தியம் பற்றி நிறையவே செய்திகள் உள்ளன. பழங்கால இந்திய நிலப்பரப்பில் நிலவிய வைத்திய முறைகள் பற்றி எடுத்துரைக்கும் நுால்.– டாக்டர் கார்முகிலோன்


புதிய வீடியோ