/ ஆன்மிகம் / இதிகாசக் கதைகள் (இராமாயண, மகாபாரத சுருக்க உரைநடை)
இதிகாசக் கதைகள் (இராமாயண, மகாபாரத சுருக்க உரைநடை)
ராமாயணம், மகாபாரதத்தை புதிதாகப் படிப்பது போல் ஆர்வம் ஏற்படுத்தும் நுால். படிக்க எளிமையாய், மகிழ்ச்சி தருவதாய் உள்ளது. ராமபிரான் இளம் வயதில் ஊனமுற்ற பெண் மீது கல்லைத் துாக்கி எறிந்தானாம். மந்தரை என்ற அந்தப் பெண், ராமனை பழி வாங்கினாளாம். என்ன தான் ராமன் தெய்வப்பிறவி என்றாலும், இப்படி செய்தது தவறு தானே என தோன்றும். ஆனால், ராமனுக்கு மந்தரையை இழிவுபடுத்துவது நோக்கமல்ல. அது வேறு வகையானது. இந்நுாலை படித்தால் அது பற்றிய விடை தெரியும்; ராமன் மீது கொண்ட அபிப்ராயம் மாறும். ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் ஒன்றாக்கி தந்துள்ள நுால்.– தி.செல்லப்பா