/ கதைகள் / கால் நனைத்த பொழுதுகள்

₹ 400

மீனவ கிராமத்தை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். வேறுபாடுகள் இன்றி சிறுவர்கள் கடற்கரை மணலில் ஆடி, ஓடி, பாடி, விளையாடி மகிழ்ந்திருந்ததை வெள்ளை உள்ளமாக காட்டுகிறது. பிஞ்சு மனங்களில் ஜாதி ஏற்றத்தாழ்வு, பாலின பாகுபாடு போன்ற நச்சுச்செடி எவ்வாறு வேரூன்றப்படுகிறது என்பதை எடுத்துரைக்கிறது. பள்ளியிலே பாகுபாடு விதைக்கபடுவதையும், முரண்பாடுகளை சிறுவர்கள் உள்வாங்குவதையும் கவனமுடன் விவரிக்கிறது. சமூகத்தில் குடும்ப அமைப்புகள் வளர்க்கும் ஏற்றத்தாழ்வால் ஏற்படும் இறுக்கத்தை எடுத்துரைக்கிறது. கல்வியை தொடர்வதற்கு மொழி முட்டுக்கட்டையாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது. மீனவ குடும்பங்களில் நடக்கும் வாழ்க்கை போராட்டத்தை படம் பிடிக்கும் நாவல். – புலவர் சு.மதியழகன்