/ புத்தக மதிப்புரை / காலநிலை மாற்றத்தால் மூழ்கும் டெல்டா மாவட்டங்கள்
காலநிலை மாற்றத்தால் மூழ்கும் டெல்டா மாவட்டங்கள்
காலநிலை மாற்றம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு நுால். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் அமைந்த திட்டம் பற்றிய தகவல்களுடன் மலர்ந்துள்ளது. இதற்கு தொண்டாற்றும் தன்னார்வலர்கள் குறித்த விபரங்கள் ஏராளமாக உள்ளன. அரசின் திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகள் குறித்த விபரங்களும் விரிவாக தரப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேராபத்துகள் குறித்து எச்சரிக்கும் வகையில் புள்ளி விபரங்களுடன் ஆக்கங்கள் உள்ளன. இயற்கை பேரிடர் பாதிப்புகள் பற்றி அறிய தருகிறது. பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் அமைப்புகள், தொண்டர்கள் குறித்த விபரங்களையும் பதிவு செய்துள்ள நுால். – சிவா




