/ அரசியல் / களியாட்டு

₹ 100

தேர்தல் கூட்டணியில் நடக்கும் பேரத்தை, சாமானியனின் கேள்வியாக முன்வைக்கும் நுால். மக்கள் பணத்தை கொள்ளையடித்து, பதவிகளை அனுபவித்து கடைசியாக சிலை, மணிமண்டபம் கேட்கும் அரசியல்வாதிகளை சாடுகிறது. சுற்றியும் அயோக்கியர்களை வைத்து, என்னை மட்டும் ஏன் நல்லவனாக படைத்தாய் என இறைவனிடம் முறையிடுகிறது. சட்டம், தண்டனை இருந்தாலும் குற்றங்கள் குறையவில்லை என கவலை கொள்கிறது. சுதந்திர தினத்தில் தள்ளுபடி கொடுத்து வணிகம் பெருக்குவதை சாடுகிறது. அறத்துடன் வாழ்வதை எடுத்துரைக்கிறது. எதார்த்தத்தையும், சினிமாவையும் பிரித்து பார்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. நவ நாகரிக போக்கை சாடுகிறது. சமூகத்தில் இருந்து எடுத்த வார்த்தையாக மிளிரும் நுால். – டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி