/ கதைகள் / கமலா இல்லத்தில் ஒரு மர்மம்!
கமலா இல்லத்தில் ஒரு மர்மம்!
குடும்பத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்வை தொடர்ந்து நகைச்சுவையோடு பரபரப்பாக விவரிக்கும் நாவல். அதிர வைக்கும் மர்மத்தை துப்பறிந்து அவிழ்ப்பது, விறுவிறுப்பு குன்றாமல் சுவாரசியமாக உள்ளது. தேர்வை முடித்து வரும் மாணவர்கள் அடித்த கூத்துகளுடன் சுவை குன்றாமல் கலகலப்பாக கதை நகர்கிறது. தாமோதரன் தாத்தா, வரதன் தாத்தா, கமலா பாட்டி, மாலினி பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அண்ணன் விஷால், தங்கை என கூட்டு குடும்ப உறவுகளின் உணர்வுகள் இழைந்தோடுவதை காண முடிகிறது. முதுமையால் தாத்தா இயற்கை எய்த துக்கம் அனுஷ்டித்த போது சொத்து பிரச்னை எழுகிறது. அவரது இறப்பின் மர்மத்தை துப்பறியும் முறை, ஆர்வத்தின் உச்சத்திற்கே அழைத்து செல்கிறது.– புலவர் சு.மதியழகன்