/ கதைகள் / கம்பனின் பரதன் கண்டவன் வரதன்
கம்பனின் பரதன் கண்டவன் வரதன்
கம்பக் கடலில் மூழ்கி ஆய்ந்து, பரதன் பற்றிய முத்துக்களை அழகுற கோர்த்துக் கொடுக்கப்பட்டுள்ள நுால். கம்பன் கண்ட பரதன் பால, அயோத்தியா, யுத்த காண்டங்களில், குரு விசுவாமித்திரர், தந்தை தசரதன், கொடியவள் கூனி, சகோதரன் சத்ருக்கனன், தாய் கைகேயி, அன்னை கோசலை, ஆசிரியர் வசிட்டர், நண்பன் குகன், முனிவர் பரத்துவாசர், அண்ணன் ராமன், லக்குவன், அடியவன் அனுமன் மற்றும் பலருடன் கொண்டிருந்த அன்பு, மதிப்பை, 17 தலைப்புகளில் ஆராய்ந்து கூறுகிறது. புதிய சிந்தனைகள் பதிவாகியுள்ளன. ஆய்வுக்கு ஆதாரமாக கம்பன் பாடலை மேற்கோள் காட்டியுள்ளது, தங்க நகையில் வைரம் பதித்தது போல் மின்னுகிறது. ராமனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவன் பரதன் என்ற கருத்தோவியம் வரைந்து காட்டப்பட்டுள்ள நுால்.– முனைவர் மா.கி.ரமணன்