/ புத்தக மதிப்புரை / கனலின் பயணம்

₹ 80

சிறுவர் – சிறுமியருக்கு குதுாகலம் தரும் வகையில் படைக்கப்பட்டுள்ள சிறிய நாவல் நுால். கனல் என்ற கதாபாத்திரம் பயணம் செய்வதை ஒரு கதையாக வடித்து சுவாரசியமாக காட்டுகிறது. முதன்முதலில் சிறிய ஊரில் பெண் குழந்தைகளில் கனல் தான் பயணம் மேற்கொள்கிறாள்; அதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறாள்; அவற்றை சவாலுடன் சமாளிக்கிறாள். ஒவ்வொரு கட்டத்திலும் பயணத்தின் முன் உள்ள சவால்களை எதிர்கொள்வதை கதை போக்கில் மிக நுட்பமாக விவரிக்கிறது. வாசிப்போருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சிறுமியர் தயக்கம் இன்றி எந்த செயலையும் துணிச்சலுடன் செய்ய முன்வர வேண்டும் என வழிகாட்டுகிறது. சிறுவர் – சிறுமியருக்கு இனிய அனுபவத்தை தரும் வகையில் படைக்கப்பட்டுள்ள சிறிய நாவல் நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை