/ புத்தக மதிப்புரை / கனவு தொழிற்சாலை

₹ 150

தொழிற்சாலையில் பணிபுரிந்த அனுபவத்தை தொகுத்து கூறும் நுால். பணிக்கு செல்லும்போது ரயில், பேருந்தில் நடந்த நிகழ்வுகள் சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளன. பேருந்து, ரயில் நிலையங்களில் மனிதர்களின் உரையாடல், வியாபார யுக்தி, நெரிசல் போன்றவற்றை சுவாரசியமாக தருகிறது. அதிகாலை நாளிதழ்களை பிரித்து வினியோகிக்கும் ஊழியர்களின் பணியை பார்த்து கற்றுக் கொண்டது விவரிக்கப்பட்டுள்ளது. இரவு பணியில் ஏற்படும் சிரமம், உடல் பாதிப்பு, பெற்றோரிடம் கிடைக்கும் ஆறுதல் என, அனுபவம் வழியாக மேம்பட்ட கருத்துக்களை கூறுகிறது. புத்தக வாசிப்பால் கிடைக்கும் நன்மைகள், கதை, ஜோக் எழுதியதை கூறுகிறது. வாழ்வில் முன்னேற எதிர்கொள்ளும் சவால்களை கூறும் நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை