/ புத்தக மதிப்புரை / காஞ்சி மகா பெரியவரின் உயரிய சிந்தனைகள்
காஞ்சி மகா பெரியவரின் உயரிய சிந்தனைகள்
காஞ்சி மகா பெரியவர் வாழ்வில் இருந்து பெற்ற கருத்துக்களை சின்னஞ்சிறு கட்டுரைகளாக தரும் நுால். பக்கத்துக்கு பக்கம் பெரியவரின் திருவுருவப் படங்கள் அலங்கரிக்கின்றன. யாருக்கும் பாரம் இல்லாமல் வாழ எண்ணி நினைத்த மூதாட்டியின் விருப்பம், பெரியவரின் கருணையால் நிறைவேறியதை குறிப்பிடுகிறது. திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, கோவில்களில் பாடப்பட்டு வருவதற்கு பெரியவர் தான் காரணம் என்கிறது. மனிதனின் முயற்சியைக் காட்டிலும், பிரார்த்தனை செய்தால் பலன் கை மேல் கிடைக்கும் என்கிறது. ராணுவத்தினருக்கு, அனுமன் சாலிசா கவசம் உந்து சக்தியாக இருப்பதாக குறிப்பிடுகிறது. செய்திகள் நிறைந்த புத்தகம். – சீத்தலைச்சாத்தன்




