/ கவிதைகள் / காஞ்சிரங்காய் உணவில்லை

₹ 100

வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள், தீராத சோகங்களை வெளிப்படையாக கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். சமூகத்தில் எந்தெந்த இடங்களில் மனிதன் வேறுபடுத்தி பார்க்கப்படுகிறான் என்பதை, ‘வேற்றுமை தெரிந்த நுாற்றுப்பால்’ கவிதை உணர்த்துகிறது. சமத்துவ நாட்டில், மனிதனுக்கு ஓட்டு போட, ரேஷன் பொருள் வாங்க என அடையாள அட்டைகள் இருப்பதை, ‘சர்வம் சடங்கார்ப்பணம்’ கவிதையாக சொல்கிறது. பணத்தை மட்டும் இரட்டிப்பாக்கும் மனங்களை, ‘முதலீடு’ கவிதை சாடுகிறது. கவுன்சிலர் தேர்தலில் நடக்கும் கூத்தை, ‘எமக்கென்ன’ கவிதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சினிமா பிரபலங்கள் நரை கூடினாலும் இளைமையுடன் காட்டுவதை, ‘தாரகை’ கவிதை சுட்டி காட்டுகிறது. சமூகத்தை பிரதிபலிக்கும் தொகுப்பு நுால். – டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி