/ ஆன்மிகம் / கர்மா
கர்மா
கர்மா பற்றிய கேள்விகளுக்கு விடை சொல்லும் நுால். துன்பத்திற்கு காரணத்தை விளக்குகிறது. கர்மாவை ஐந்து வகையாக பிரித்து விளக்கம் தருகிறது. என்றோ, எப்போதே ஒருவர் பிறருக்கு துன்பம் செய்திருந்தால், அதன் தாக்கம் கர்மா வழியே வரும் என்கிறது. சமூகத்தில் பிறர் செயல்படும் விதமும் ஒருவித கர்மா என குறிப்பிடுகிறது. அவரவர் செய்த வினைகளே அவர்களை பாதிக்கும் என குறிப்பிடுகிறது. நன்மை செய்தால் நன்மையும், தீங்கு செய்தால் தீமையும் விளையும் என்பதை ஆணித்தரமாக நிலை நாட்டுகிறது. இதை அறிந்தால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என்கிறது. மேலை நாடுகளில் இதில் ஆய்வு நடப்பதாக குறிப்பிடுகிறது. உண்மையை புரிந்து வாழ்ந்தால் துன்பம் இல்லை என்கிறது. கர்மா பற்றி ஆராய்ச்சி செய்வோருக்கு பயன்படும் நுால்.– புலவர் ரா.நாராயணன்




