/ கட்டுரைகள் / காட்சியும் கருத்தும்

₹ 150

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, குழந்தை வளர்ப்பு, பெண்ணியம், உடல் நலம், தன்னம்பிக்கை, மனித மாண்புகள், சமூக அவலங்கள் போன்ற பொருண்மைகளில், 252 அகவற்பாக்களாக அமைந்துள்ள நுால். ‘வாழ்ந்தாலும் வைதிடுவர்; வழி தவறி வீழ்ந்தே வாடினாலும் நகைத்திடுவர்; தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தகவுடையோன் வெல்வான்; தன் வன்மை உணர்ந்தோனே தலைநிமிர்ந்து மிளிர்வான்’ என தன்னம்பிக்கை ஊட்டுகிறது. மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை கூறி இயற்கை அரணைப் பாதுகாக்க வலியுறுத்துகிறது. லஞ்சத்தை சாடுகிறது. மொழியின் மேன்மையை எடுத்துரைக்கிறது. வாழ்வுக்கு வழிகாட்டும் நுால்.– புலவர் சு.மதியழகன்


சமீபத்திய செய்தி